ஒருபோதும் ரணில் அல்ல -உறுதியாக கூறுகிறார் மகிந்தவின் உறவினர்
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அடுத்த அதிபர் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அல்ல என ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் மகிந்தவின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
தான்100 வீத நம்பிக்கையுடன் சொல்கிறேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வார இறுதி நாளிதழ் ஒன்றுடனான கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மொட்டுவின் வாக்குகள் ரணிலுக்கு கிடைக்காது. ரணில் மொட்டுவின் வேட்பாளர் அல்ல என்பதை நான் 100 வீதம் சொல்கிறேன். மொட்டுவின் அரசியல் கருத்து ரணிலின் அரசியல் கருத்து அல்ல.
ரணிலின் ஆட்டம்

வஜிர அபேவர்தன விரும்பும் வழியில் ரணிலை 2048 வரை யாரும் இருக்க விடமாட்டார்கள். ரணிலின் அரசியல் வெற்றியின் வரலாறு சரியாக இரண்டு வருடங்கள் நீடிக்கும்.
எனவே எதிர்வரும் ஜூன் மாதம் ரணிலின் ஆட்டம் ஆரம்பமாகும். அதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
அடுத்த அதிபர் ஒரு இளைஞன்

உலகம் போகிற போக்கில் அடுத்த அதிபர் ஒரு இளைஞன். பேராசிரியராக இருந்தாலும் அரசியல் அனுபவம் இல்லாமல் இருக்க முடியாது. கோட்டாவின் சகோதரர் அதை உறுதிப்படுத்தினார்.
எங்கள் வேட்பாளர் பற்றி நான் பேசவில்லை. நாம் மொட்டில் இருந்து ஒருவரை கொண்டு வருகிறோம். அந்த நபரைப் பற்றி நம் தலைவர்கள் சொல்வார்கள்.