ரணில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டால் சஜித் களமிறங்கமாட்டார் - உறுதியாக கூறும் ஐ.தே.க யின் முக்கியஸ்தர்
ரணில் விக்கிரமசிங்க அதிபர் வேட்பாளராக போட்டியிடுவாராக இருந்தால் சஜித் பிரேமதாஸ வேட்பாளராக களமிறங்கமாட்டார் என்பதை தான் உறுதியாக கூறுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் சஜித் பிரேமதாச போட்டியிடப் போவதில்லை என்பதனை அடித்துக் கூறுகின்றேன்.
ஹில்டன் விடுதி

இம்முறை தேர்தலில் சஜித் தரப்பினர் டலஸ் அழகப்பெரும அல்லது மைத்திரிபால சிறிசேன அல்லது அனுரகுமார திஸாநாயக்க ஆகியோரில் தங்களின் கயிற்றை சாப்பிடுபவரை தள்ளிவிட்டு தப்பித்துக்கொள்வர்.
ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் சஜித் பிரேமதாச யால காட்டுக்கே செல்வார். அவருக்கு அங்கு சென்று நுளம்புக்கடியில் இருக்க வேண்டிய அவசியமும் இருக்காது.
தற்போது அதிபர் அங்கு ஹில்டன் ஹோட்டலையும் திறந்துவைத்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.