ரணிலுக்கு அடுத்தடுத்து அடிக்கும் அதிர்ஷ்டம்! சிறிலங்காவின் அடுத்த அரச தலைவராக உருவெடுக்கும் சாத்தியம்
வஜிர அபேவர்தனவின் ஆருடம்
ஒரு ஆசனத்தை வைத்துக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதமராகவும் அரச தலைவராகவும் உருவெடுப்பார் என்று நான் அன்று கூறினேன்.
இன்று ரணில் பிரதமராகிவிட்டார். நான் அன்று கூறிய விடயம் அவ்வாறே நடந்து கொண்டு இருக்கின்றது. அதனால் பதற்றமடையாமல் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருங்கள். நான் கூறியது எல்லாம் நடக்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன ஆருடம் வெளியிட்டுள்ளார்.
காலியில் நடைபெற்ற கட்சி உறுப்பினர்களுடனான கூட்டத்தில் வஜிர அபேவர்த்தன இதனைக் கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்துரைத்த அவர்,
“ரணில் விக்ரமசிங்க ஒரே ஒரு ஆசனத்தை வைத்துக்கொண்டு பிரதமராகவும் அரச தலைவராகவும் உருவாகும் வல்லமை கொண்டவர் என்று நான் முன்னர் கூறினேன். அது இன்று நடந்து கொண்டிருக்கின்றது.
ரணிலின் சாமர்த்தியம்
அரசியலில் எனக்கு இருக்கின்ற அனுபவங்களை வைத்தே நான் ரணில் நாடாளுமன்றத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஊடாக வரும்போது, இந்த விடயத்தைக் குறிப்பிட்டேன்.
அதுமட்டுமன்றி டொலர் இல்லாத ரூபா இல்லாத ஒரு திறைசேரியையே ரணில் விக்ரமசிங்க பொறுப்பேற்றுள்ளார். அதுவும் மிகவும் தாமதமாகவே ரணிலுக்கு கிடைத்திருக்கின்றது. அப்படி வெறுமையான திறைசேரி கிடைத்திருந்தாலும் கூட மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் தீர்வைப் பெற்றுக் கொடுப்பார்.
பதற்றப்படாமல் அவசரப்படாமல் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருங்கள். பிரச்சினைகளை ரணில் விக்ரமசிங்க தீர்த்து வைப்பார்” என்றார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025
