ஒப்ரேசன் துவாரகாவும் கில்மிசா மிசனும் : ரணிலுக்கு கிடைத்த ஆதாயம்
இந்திய தொலைக்காட்சி நிகழ்வு அரங்கொன்றில் நடந்த இசைநிகழ்ச்சியின் வெற்றியின் முடிவுகள் இப்போது அரசியல் அதிர்வுகளாக வெளிப்பட தலைப்பட்டுள்ளது.
அந்த வெற்றியை தமக்கு சாதகமாக்க கொழும்பு அதிகார தலைகள் முயல்வது தெரிகின்றது.
இலங்கையை சேர்ந்த அதுவும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒரு போட்டியாளருக்கு கிட்டிய வெற்றி ஒரு நுண்ணிய அரசியல் செய்தியையும் மறைமுகமாக கூறுகின்றது.
கடந்த சில நாட்களாகவே துவாரகா என்ற பெயரை மையப்படுத்தி தமது சக்தியை வாதபிரதிவாதம் செய்து விரயமாக்கிய சமூக வலைத்தள பயனாளர்களின் கணிசமோனார் பகுதி நேற்று கில்மிசாவை மையப்படுத்தி தமது சக்தியை விரயமாக்க தலைப்பட்டனர்.
ரணிலுக்கான வடக்கு பயணத்தில் அவருக்கெதிரான அறவழிப்போராட்டங்கள் குறித்த செய்திகளை முடக்க தமிழ் மக்களின் பாராட்டுக்களை பெற்ற கில்மிசாவை துருப்பு சீட்டாக தென்னிலங்கை அரசியல் பயன்படுத்துகின்றது.
எதிர்காலத்தில் ரணிலுக்கான வாக்கு வேட்டைக்காக வடக்கில் இடம்பெறும் பரப்புரைகளில் கில்மிசா என்ற சிறுமியின் பாடல் நிகழ்ச்சியை நடத்தும் வகையிலும் திட்டங்கள் போடப்படலாம்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை காணொளியில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |