அமெரிக்காவுக்கு சவாலாகியுள்ள ரணிலின் முக்கிய ஒப்பந்தம்
சர்வதேச இறையாண்மை பத்திர (ISB) கடனைத் தீர்ப்பது தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கை தனது ஏற்றுமதிகளுக்கு விதிக்கப்பட்ட 30 சதவீத வரியைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சிறிலங்காவின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியில் கையொப்பமிட்டவர் என்ற வகையில், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சிகளுக்கு உதவும் பொறுப்பு, அமெரிக்காவுக்கு உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இலங்கை தனது கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார சரிவு
இருப்பினும், நமது பொருளாதாரம் சரிந்தால் இது சாத்தியமில்லை என்றும், எனவே, அமெரிக்காவுடனான கலந்துரையாடல்களில் இந்தப் பிரச்சினை எழுப்பப்பட வேண்டும்எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
“பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பை செயல்படுத்துமாறு அமெரிக்கா ஏற்கனவே இலங்கையிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தப் பிரச்சினை பரந்த விவாதத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். முந்தைய ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் வர்த்தக நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட வியட்நாம் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகள் இலங்கையை விட வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.
மற்றவை முன்னேறிச் செல்லும்போது, இலங்கை இன்னும் போராடி வருகிறது.
அரசாங்கத்திற்கு ஆலோசனை
அமெரிக்காவை கையாள்வது குறித்து தற்போதைய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது அர்த்தமற்றது.
அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். சீனா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மை (RCEP) உடன் இலங்கை தீவிரமாக ஈடுபட வேண்டும்.
சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சி, ஜப்பானின் ஆசிய-பசிபிக் உத்தி மற்றும் இந்தியாவின் இந்தியப் பெருங்கடல் கட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட வேண்டியது மிகவும் அவசியமிக்கது” என ரணில் விக்ரமசிங்க விளக்கியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

