சாள்ஸ் நிர்மலநாதனை திடீரென சந்தித்தார் ரணில்
மன்னாரிற்கு (Mannar) விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe), நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனை (Charles Nirmalanathan) சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பானது, இன்றையதினம் (17) சாள்ஸ் நிர்மலநாதன் இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
தேர்தல் பிரசார நடவடிக்கை நிமித்தம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பொது அமைப்பு
இதன்போது மன்னார் தமிழரசுக்கட்சியின் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ரணிலிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
அத்தோடு, தமிழரசு கட்சியின் மன்னார் கிளையின் இளைஞர் அணி, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களுடன் சாள்ஸ் நிர்மலநாதன் வீட்டில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு தொடர்பில் சாள்ஸ் நிர்மலநாதனிடம் வினவிய நிலையில், இது ஒரு மரியாதையின் நிமித்தமான சந்திப்பு எனவும் ஜனாதிபதி தேர்தலில் ஒட்டு மொத்த மன்னார் மக்கள் மற்றும் ஆதரவாளர்களின் முடிவே எனது முடிவு எனவும் மக்கள் யார் பக்கமோ அவர்களின் பக்கமே நான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |