அடுத்த சுதந்திர தினத்தில் ரணில் -ராஜபக்ச அணி சிறையில் -வசந்த சமரசிங்க
Ranil Wickremesinghe
Independence Day
Sri Lanka
Rajapaksa Family
By Sumithiran
அடுத்த சுதந்திர தினத்தில் ரணில் -ராஜபக்ச அணி சிறையிலேயே இருக்கும் என மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ரணில் - ராஜபக்சாக்களின் இறுதி சுதந்திர தினம்
நாட்டில் பணமில்லை எனத் தெரிவித்து 75ஆவது வருட சுதந்திரத் தினத்தை அரசாங்கம் கொண்டாடியுள்ளது. ரணில் - ராஜபக்சாக்கள் தங்களது இறுதி சுதந்திரத் தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.
அடுத்த சுதந்திரத் தினத்தை கொண்டாட ரணில் - ராஜபக்சாக்கள் வெளியில் இருப்பார்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.
மார்ச் 09 சுதந்திர தினம்
பிரித்தானியர்கள் நாட்டை விட்டுச் சென்று 75 வருடங்களாகிறது. ஆனால், நாட்டு மக்கள் தங்களது சுதந்திரத் தினத்தை மார்ச் 09ஆம் திகதி கொண்டாடுவதற்கு தீர்மானித்துள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி