தம்மிக்கவின் குற்றச்சாட்டை கேலி செய்த ரணில் (காணொலி)
மழுப்பலான பதிலை அளித்த ரணில்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதியமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்த கருத்து தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் தம்மிக்க பெரேரா, நாட்டுக்கு சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு வருவதை நிதியமைச்சர் தடுத்ததாக குற்றம் சுமத்தினார்.
ரணில் மீதான குற்றச்சாட்டு
நிதியமைச்சரிடம் நாட்டிற்கான எதிர்கால பணப்புழக்கத் திட்டமிடல் இல்லை என்று கூறிய அவர், டொலர் வருவாய், கடன் வாங்குதல், பிரிட்ஜிங் நிதி, கிடைக்கக்கூடிய கடன் வரிகள் மற்றும் அத்தியாவசியமான நல்ல கடன் வரிகள் தொடர்பான அனைத்து விஷயங்களையும் நிதியமைச்சர் தாமதப்படுத்தியுள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
Min. @_dhammikaperera says that you should resign @RW_UNP. You need to make a statement on this - @HarshadeSilvaMP #SriLanka ##Colombo #Parliament pic.twitter.com/UPtfAC2NZp
— Manthri.LK_Watch (@ManthriLK_Watch) July 6, 2022
இது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா இன்று நாடாளுமன்றத்தில் வினவிய போது, பிரதமர் கேலி செய்து கேள்விக்கு பதிலளிக்காமல் தவிர்த்துள்ளார்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 5 நாட்கள் முன்
