ரணில் விக்ரமசிங்கவின் வாசஸ்தலத்திற்கு தீ வைத்த விவகாரம் : நீதிமன்றின் உத்தரவு
ரணில் விக்ரமசிங்கவின் கொள்ளுப்பிட்டியிலுள்ள வாசஸ்தலத்திற்கு, கடந்த வருடத்தில் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் மற்றும் காணொளிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்ற நீதவான் திலின கமகே நேற்று (31) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டவர்களான நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத நான்கு பேருக்கும் பிடியாணை பிறப்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வாசஸ்தலத்திற்கு தீ
கடந்த வருடம் ஜூலை மாதம் 09ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் கொள்ளுப்பிட்டி வாசஸ்தலத்திற்கு தீ வைக்கப்பட்ட போது தீ அனர்த்தத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அங்கு தீயணைப்புப்படை வந்தது.
இவ்வாகனத்தை தடுத்து அரச ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்காவும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |