ரணிலின் கைது.... ஒரு ஜனாதிபதிக்கு இவ்வாறு செய்வது தவறு : திலித் ஜயவீர
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கைது தொடர்பான நீதிமன்ற செயற்பாடுகளுக்கு முன்னர் செய்யப்பட்டுள்ள அந்த விசாரணையின் விதம் நமது நாட்டின் பிம்பத்திற்கு நல்லதல்ல என நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர (Dilith Jayaweera) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை இன்று (23) மதியம் சிறையில் சந்தித்துவிட்டு திரும்பிய பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "அவர் கிரிக்கெட் விளையாடச் சென்றார், ஆனால் இந்த அரசாங்கம் எல்லே விளையாடுகிறது. பந்தால் உடம்பில் அடித்துவிட்டு அவுட் என்கின்றனர்.
ரணில் விக்ரமசிங்கவின் அரசியல்
எனது அரசியல் வாசிப்பின்படி, ரணில் விக்ரமசிங்கவின் சிறைவாசம் இலங்கையின் அரசியலை ஒரு புதிய திசைக்கு அழைத்துச் செல்லும் ஒரு சம்பவமாக இருக்கும்.
ரணில் விக்ரமசிங்கவின் அரசியலை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் இந்த நாட்டின் ஒரு ஜனாதிபதிக்கு இவ்வாறு செய்வது தவறு.
நீதிமன்றம் செய்தது சரியா? தவறா? என்று நான் கூறவரவில்லை. நீதிமன்ற செயற்பாடுகளுக்கு முன்னர் செய்யப்பட்டுள்ள அந்த விசாரணையின் விதம் நமது நாட்டின் பிம்பத்திற்கு நல்ல படத்தை வரையவில்லை" என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 2 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
4 நாட்கள் முன்