மலையக மக்களின் கனவை நனவாக்கும் ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் : அரவிந்தகுமார் சுட்டிக்காட்டு

Ranil Wickremesinghe Sri Lanka A. Aravind Kumar Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 30, 2024 06:36 AM GMT
Report

மலையக மக்களின் 200 வருட கனவை நனவாக்கும் விடயம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe)தேர்தல் விஞ்ஞபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் (A. Aravind Kumar) தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனமானது முழுநாட்டிற்கு ஏற்றவாறும் முழுநாட்டையும் துரிதகதியில் அபிவிருத்தி செய்யும் நோக்கில் இருக்கின்றதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று (29.08.2024)  இடம்பெற்ற ஒன்றிணைந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக்  குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல்: சலுகைகள் கொட்டிக்கிடக்கும் விஞ்ஞாபனம்

ஓய்வூதியம் பெறுவோருக்கு மகிழ்ச்சித் தகவல்: சலுகைகள் கொட்டிக்கிடக்கும் விஞ்ஞாபனம்

மலையக மக்களின் வாழ்க்கை 

இங்கு தொடர்ந்தும் கருத்து  தெரிவித்த அவர், ”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயம் மலையக மக்களின் வாழ்க்கை முறைமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு கொள்ளை பிரகடனமாக அமைந்துள்ளது.

இதுவரையிலும் இந்த நாட்டில் பல்வேறு ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. அவ்வப்போதும் கொள்கை பிரகடனங்கள் வெளியிடப்பட்டுள்ளன. எந்தவொரு கொள்கை பிரகடனமும் இது போன்று வெளியிடப்பட்டதில்லை இது குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்.

மலையக மக்களின் கனவை நனவாக்கும் ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் : அரவிந்தகுமார் சுட்டிக்காட்டு | Ranil S Manifesto For Up Country People Education

மலையக மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் வெளியிடப்பட்ட கொள்கை பிரகடனத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கின்றோம். அதுமட்டுமன்றி ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவின் வெற்றிக்கு முழுமூச்சாக செயற்படுவோம்.

தற்போதைய ஜனாதிபதி கல்வித் துறையினை மேம்படுத்துவதற்கு எவ்வாறான செயற்பாடுகளை கொண்டுள்ளார் என்பதை அனுபவ ரீதியாக நான் அறிந்துள்ளேன். இதுவரையிலும் எந்த ஒரு ஜனாதிபதியும் காட்டாத அக்கறையை கல்வித்துறையில் வெளிக்காட்டியிருக்கிறார்.

உறுமய - அஸ்வெசும திட்டங்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

உறுமய - அஸ்வெசும திட்டங்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

அனுபவம் வாய்ந்த ஜனாதிபதி வேட்பாளர்

நாடு முன்னேறுவதற்கு கல்வி அடித்தளமாக அமைகிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த நாட்டில் ஒரு இருண்டயுகம் காணப்பட்டது. அந்த இருண்ட யுகத்தை குறுகிய காலத்தில் சீர்செய்த பெருமை தற்போதைய ஜனாதிபதிக்கே உரியது.

இந்த ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள். அதில் அனுபவம் வாய்ந்த ஒரே ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

மலையக மக்களின் கனவை நனவாக்கும் ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம் : அரவிந்தகுமார் சுட்டிக்காட்டு | Ranil S Manifesto For Up Country People Education

ஆகையால் அவரின் வெற்றி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவரின் வெற்றியூடாக முழு இலங்கையும் முன்நோக்கி நகரும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துமில்லை.

இந்த கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள அனைத்து விடயங்களையும் செயற்பாடுகள் ஊடாக காட்டுவதற்கு பாரிய பொறுப்புள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி முதல் அவரின் செயற்பாடுகள் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக இயங்கும் என்ற எதிர்பார்ப்பு எமக்கு உள்ளது.“ என தெரிவித்தார்.

வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு

வரி செலுத்துவோர் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025