ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை : அடித்துக் கூறும் அமீர் அலி

Batticaloa Ali Ameer Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Sathangani Aug 27, 2024 09:42 AM GMT
Report

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) வெற்றி நிச்சயம் இல்லை என முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எஸ். அமீர் அலி (Ameer Ali) தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையில் வாக்கு வங்கிகள் உள்ள கட்சியாக மொட்டுக் கட்சியும் (SLPP) ஐக்கிய மக்கள் சக்தியும் (SJB) தான் காணப்படுகின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி ஆதரவாளர்களுடன் மட்டக்களப்பில் (Batticaloa) இன்று (27) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது அமீர் அலி இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

ரணில் இல்லையேல் அழிவடைந்த நாடுகளில் வரிசையில் இலங்கையும்: எச்சரிக்கும் மொட்டு எம்.பி

ரணில் இல்லையேல் அழிவடைந்த நாடுகளில் வரிசையில் இலங்கையும்: எச்சரிக்கும் மொட்டு எம்.பி

வாக்கு வங்கிகள் உள்ள கட்சிகள்

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “தற்போதைய தேர்தல் கள நிலவரத்தின்படி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்தில் உள்ளார்.

அடுத்து வரும் சில தினங்களில் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) இந்த இடத்துக்கு வந்து விடுவார், ஏனெனில் அவர்களது கட்சிக்கு என்று ஒரு வாக்கு வங்கி உள்ளது.

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை : அடித்துக் கூறும் அமீர் அலி | Ranil S Victory Is Not Certain President Election

இலங்கையில் வாக்கு வங்கிகள் உள்ள கட்சியாக மொட்டுக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் தான் காணப்படுகின்றது. ரணிலுடைய கட்சிக்கு வாக்கு வங்கி இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஜேவிபி (JVP) கட்சிக்கும் 4 இலட்சம் வகையான வாக்குகள் காணப்படுகிறது. தற்போது அக்கட்சி ஒரு வளர்ச்சி போக்கினை காட்டுகிறது.

நமது ஜனாதிபதி வேட்பாளரின் வெற்றியில் தான் இங்குள்ளவர்களின் வெற்றி தங்கியுள்ளது. உங்களது பகுதிகள் அபிவிருத்தி காணப்பட வேண்டுமானால் சஜித்தின் வெற்றி முக்கியம்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு கடூழிய சிறைத்தண்டனை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பௌசிக்கு கடூழிய சிறைத்தண்டனை

சஜித்தின் வெற்றி நிச்சயம்

சஜித் பிரேமதாசாவிற்கு (Sajith Premadasa) 54 இலட்சம் வாக்குகள் ஏற்கனவே உள்ளது. இருப்பினும் மேலதிகமாக 15 இலட்சம் வாக்குகளே எமக்கு தேவைப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை : அடித்துக் கூறும் அமீர் அலி | Ranil S Victory Is Not Certain President Election

அதற்கான பணிகளை நாம் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். சஜித்தின் வெற்றி நிச்சயம் அவருடன் இலகுவாக அணுகி எமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.

ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கையிலே அதிகமான வீட்டுத் திட்டங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்தவர் அவர். ஜனாதிபதி ஆனாலும் இந்த வீடமைப்பு அமைச்சை தன்னிடமே கொண்டு அனைத்து வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

எனவே ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை. அனைவரும் வெற்றி பெறும் வேட்பாளர் கட்சியுடன் இணைந்து பணியாற்ற முன்வருமாறு வேண்டுகின்றோம்“ என தெரிவித்தார்.

அதிகரிக்கப்படவுள்ள உர மானியம் : விவசாய அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

அதிகரிக்கப்படவுள்ள உர மானியம் : விவசாய அமைச்சு வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


Gallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015