மாலைதீவின் உதவியை நாடிய ரணில்
இலங்கையில் அண்மைக்காலமாக போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், இதற்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க மாலைதீவின் உதவியை நாடியுள்ளார்.
மாலைதீவு உப அதிபருடனான சந்திப்பின்போதே அவர் இந்த உதவியை கோரியுள்ளதாக அதிபரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மாலைதீவு உப அதிபர் பைசல் நசீம் மற்றும் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் கொழும்பிலுள்ள அதிபர் செயலகத்தில் நேற்று(2) சந்திப்பொன்று இடம்பெற்றது.
நீண்டகால நட்புறபு

இதன்போது, மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்தர சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இலங்கையுடன் கைகோர்க்குமாறும் அவர் மாலைதீவு உப அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
போதைப்பொருள் அச்சுறுத்தல்

அத்துடன், பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதுடன், போதைப்பொருளுக்கு எதிராகப் போராடுவதற்காக மாலைதீவின் உதவியையும் அதிபர் நாடியுள்ளார்.