தேர்தல் முடிந்ததும் நாட்டைவிட்டு வெளியேறுகிறார் ரணில்
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற இளைஞர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,எதிர்வரும் 14ஆம் திகதிக்கு பின்னர் விடுமுறைக்காக நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவித்தார்.
நாட்டைவிட்டு வெளியேறவுள்ளேன்
வரும் 14ம் திகதி வரை தேர்தல் கூட்டங்களில் பங்கேற்பீர்கள், அதன் பிறகு என்ன செய்வீர்கள் என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதன் பின்னர் விடுமுறை எடுத்துக்கொண்டு நாட்டைவிட்டு வெளியேறவுள்ளேன் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
எனினும் நிரந்தரமாக செல்கிறீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “இல்லை, விடுமுறைக்காக செல்கின்றேன். ஓரிரு சொற்பொழிவுகளுக்கு வருமாறு கூறியுள்ளனர்” என்றார்.
கொழும்பு ஆர்கேட் வளாகத்தில் இளைஞர் சந்திப்பு நடைபெற்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |