சஜித்தின் அலுவலகத்திற்கு முதன்முறையாக செல்லவுள்ள ரணில்! முக்கிய சந்திப்பில் நாமலும் இணையக்கூடும்...

Namal Rajapaksa Ranil Wickremesinghe Sajith Premadasa
By Dharu Jul 19, 2026 01:22 AM GMT
Report

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்கும் அரசின் முயற்சி தொடர்பாக எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை ஒருங்கிணைக்கும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலில் முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை (23) கொழும்பு, சிறிமத் மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்சவும் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அடையாளங்களை அழிக்க முற்படும் சந்திரசேகர் எம்.பி! கடற்றொழில் சமூகத்தின் பகிரங்க குற்றச்சாட்டு

அடையாளங்களை அழிக்க முற்படும் சந்திரசேகர் எம்.பி! கடற்றொழில் சமூகத்தின் பகிரங்க குற்றச்சாட்டு

ஐக்கிய தேசியக் கட்சி - பொதுஜன பெரமுன

சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அவரது அலுவலகத்திற்கு ரணில் விக்கிரமசிங்க வருகை தரும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் முயற்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் வகையில் இந்தக் கூட்டத்தை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

சஜித்தின் அலுவலகத்திற்கு முதன்முறையாக செல்லவுள்ள ரணில்! முக்கிய சந்திப்பில் நாமலும் இணையக்கூடும்... | Ranil To Visit Sajith S Office For The First Time

இதுதொடர்பாக நாமல் ராஜபக்ச தனிப்பட்ட முறையிலும் எதிர்க்கட்சித் தலைவரை தொடர்புகொண்டு கலந்துரையாடலை விரைவில் நடத்துமாறு வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தான் யால பகுதியில் இருப்பதால் எதிர்வரும் 23 ஆம் திகதியை கூட்டத்திற்காக ஒதுக்க முடியும் என சஜித் பிரேமதாச அறிவித்ததைத் தொடர்ந்து, அன்றைய தினம் கலந்துரையாடலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டத்தில் நாமல் ராஜபக்ச நிச்சயமாக பங்கேற்கவுள்ளதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொள்ளவுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவைத் தவிர, எதிர்க்கட்சியில் உள்ள ஏனைய அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்கேற்பார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்நாற்றம் வீசிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

யாழ். சங்கானையில் மர்ம மரணம்: துர்நாற்றம் வீசிய வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்

வைத்தியசாலையில் சிக்கிசை பெற்று வந்த முன்னணி ஆடை வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விளக்கமறியல்

வைத்தியசாலையில் சிக்கிசை பெற்று வந்த முன்னணி ஆடை வர்த்தக நிலைய உரிமையாளருக்கு விளக்கமறியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025