புலம்பெயர் தமிழர்களுக்கு அதிபர் ரணில் வழங்கியுள்ள வாக்குறுதி
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் முன்வர வேண்டும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இதற்கான சகல வசதிகளையும் செய்து கொடுப்பதற்கு அரசாங்கம் தயாராகவுள்ளதாவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களுக்கான தீர்வு
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில், புலம்பெயர் தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தாது பேசுவதற்கு முன்வர வேண்டும் எனவும், எந்த வேளையிலும் அவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண தான் தயாராகவே உள்ளதாக குறிப்பிட்ட அதிபர், தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தீர்மானம் குறித்து, பெரும்பாலான உறுப்பினர்கள் ஒத்துழைப்புகளை வழங்கி வரும் அதேவேளை சிலர் முரண்டு பிடிப்பதாவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
YOU MAY LIKE THIS
