ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு: ஈழவர் ஜனநாயக முன்னணியின் நிலைப்பாடு

Batticaloa Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sajith Premadasa Sri Lanka Presidential Election 2024
By Aadhithya Aug 27, 2024 11:55 AM GMT
Report

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற முடிவிற்கு தாம் வந்துள்ளதாக, ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இராஜநாதன் பிரபாகரன் (Rajanathan Prabhakaran) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்திற்கான ஸ்மார்ட் தேர்தல் அலுவலகத்தை வாழைச்சேனை பிரதான வீதியிலுள்ள கறுவாக்கேணியில் இன்று (27) திறந்து வைத்து உரையாற்றுகையிலயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், ஈழவர் ஜனநாயக முன்னணி கட்சியான எங்களது இயக்கம் இன்று வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் அகில இலங்கை ரீதியாகவும் உள்ள ஆதரவாளர்களை வைத்துக் கொண்டு முழு மனதுடன் களத்தில் இறங்கி வேலை செய்து கொண்டு இருக்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்பில் வெளியாகியுள்ள தகவல்

ரணில் விக்ரமசிங்க

ரணில் விக்ரமசிங்கவை (Ranil Wickremesinghe) மீண்டும் ஜனாதிபதியாக கொண்டு வருவதற்கான காரணம், அவரை எனக்கு நன்கு தெரியும் எனது மிக நீண்ட நாள் நண்பன். கொரோனாவால் நாடு பாதிக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு: ஈழவர் ஜனநாயக முன்னணியின் நிலைப்பாடு | Ranil Vikramasinghe Gains Eros Support

அதே போன்று அரகல என்று ஒரு கீழ்த்தரமான செயற்பாட்டால் நாடு பின் நோக்கிப்போனது. குழந்தைகளுக்கு பால்மா இல்லை, சுகயீனமான ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முச்சக்கரவண்டிக்கு பெற்றோல் இல்லை.

எதை எடுத்தாலும் தட்டுப்பாடு, இச்சந்தர்ப்பத்தில் கோட்டாபய (Gotapaya Rajapaksa) நாட்டை யாராவது பாரம் எடுங்கள் என்று ஒப்பாரி வைத்த தருணம் அந்த சந்தர்ப்பத்தில் யாரும் வரவில்லை. அப்போது நாட்டை துணிந்து வந்து பாரம் எடுத்த ஒரே மனிதன் இன்றைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான்.

இன்று பெற்றோலுக்கு தட்டுப்பாடில்லை, பால்மா இலகுவாக கிடைக்கின்றது, மருந்துக்கு தட்டுப்பாடில்லை இலகுவான போக்குவரத்து மூன்று இன மக்களும் சந்தோசமாக வாழ்கின்றனர்.

வறிய குடும்பங்களுக்கு 20000 ரூபா கொடுப்பனவு: ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

வறிய குடும்பங்களுக்கு 20000 ரூபா கொடுப்பனவு: ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

நல்ல மனிதர்

அது மட்டுமல்ல இன்று சர்வதேசமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவர் யார் என்றால் அது ரணில் விக்ரமசிங்க தான், இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு, நாட்டை பாதுகாக்க வல்லமையுடைய ஒரே ஒரு தலைவர் என்றால் இன்றைய ஜனாதிபதிதான் என்பதில் மாற்று கருத்து எவருக்கும் இருக்காது.

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு: ஈழவர் ஜனநாயக முன்னணியின் நிலைப்பாடு | Ranil Vikramasinghe Gains Eros Support

சஜித் பிரேமதாச (Sajith Premadasa) ஒரு நல்ல மனிதர் நாட்டை நேசிக்கக்கூடிய மனிதர் மக்களை நேசிக்ககூடிய மனிதர் அதே போன்றுதான் அனுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake), ஆனால் நாட்டை முன்னேற்க்கூடிய மக்களின் பொருளாதாரத்தை முன்னேற்றக்கூடிய மேற்குலக நாடுகளுடனான தொடர்பாடல் ரணில் விக்ரமசிங்கவை தவிர வேறு யாருக்கும் கிடையாது

ஈழவர் ஜனநாயக முன்னனியின் செயலாளர் நான். ஆனால் இன்று வவுனியாவில் கொள்ளையடித்துக் கொண்டு சூரையாடிக் கொண்டு குடிவெறியில் திரிந்த நான்கு ஐந்து பேரை நான் கட்சியில் இருந்து துறத்திவிட்டேன்.

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை : அடித்துக் கூறும் அமீர் அலி

ரணில் விக்ரமசிங்கவின் வெற்றி நிச்சயம் இல்லை : அடித்துக் கூறும் அமீர் அலி

ஈரோஸ் அமைப்பு

துசியந்தன் என்று வவுனியாவை சேர்ந்த நபர், இராசநாயகம் என்று இன்னுமொருவர் ஈரோசுக்கும் இவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை ஈரோஸ் எந்த கால கட்டத்திலும் யாரையும் காட்டிக் கொடுத்தோ, கப்பம் வாங்கியோ கொள்ளையடித்தோ வாழ்ந்த சரித்திரம் இல்லை.

ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு: ஈழவர் ஜனநாயக முன்னணியின் நிலைப்பாடு | Ranil Vikramasinghe Gains Eros Support

அப்படி யாராவது சொல்வார்களாக இருந்தால் இந்த கட்சியை கலைத்து விட்டு செல்ல நான் தயாரக இருக்கிறேன் கட்சியின் பெயரை வைத்து தவராக செயட்பட்ட சிலரை கட்சியில் இருந்து துறத்தி விட்டு இருக்கிறேன்.

அந்த கூட்டம் சஜித் பிரேமதாசவை சந்தித்து நாங்களும் ஈரோஸ் அமைப்பு நாங்கள் உங்களை ஆதரிக்கிறோம் என்று எங்களது கட்சியின் பெயரை பயன்படுத்திக் கொண்டு திரிகின்றார்கள் இவ்வாறானவர்களை பொது மக்கள் இனம்காண வேண்டும்” என்றார்.

மேலும், இந்த நிகழ்வில் வாழைச்சேனை கடதாசி ஆலையின் முன்னாள் தவிசாளர் தேசமான்ய மங்கள செனரத், வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் வட்டார அமைப்பாளர் பி.லட்சுமி மற்றும் பி.ரதேச அமைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

சங்கானை, சூரிச், Switzerland

05 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, சங்கத்தானை, London, United Kingdom

04 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முல்லைத்தீவு

08 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வட்டக்கச்சி

11 Jul, 2020
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் நீர்வேலி வடக்கு, Jaffna, நீர்வேலி வடக்கு

04 Jul, 2025
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன் வடக்கு, நியூஸ்லாந்து, New Zealand

05 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, Markham, Canada

08 Jul, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Scarborough, Canada

06 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

05 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

06 Jul, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கன்னாதிட்டி, பரந்தன்

06 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், அச்சுவேலி, கொழும்பு

07 Jul, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கச்சேரி கிழக்கு, Vancouver, Canada

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, கொழும்பு, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருகோணமலை, சுன்னாகம், London, United Kingdom

26 Jun, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Paris, France

28 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Hamburg, Germany

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி