ஒரேயொரு கேள்வியால் சீற்றமடைந்த ரணில்..! (காணொளி)
நான் மக்களின் நண்பன்
சர்வதேச ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்வியால் அதிபர் ரணில் விக்ரமசிங்க சீற்றமடைந்துள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று (20) மாலை கொழும்பு ஹுணுப்பிட்டிய கங்காராம விகாரைக்கு விஜயம் செய்தார்.
இந்தப் பயணம் தனிப்பட்ட விஜயமாக திட்டமிடப்பட்டிருந்த போதிலும், ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது, குறித்த சர்வதேச ஊடகவியலாளர் நீங்கள் மகிந்த ராஜபக்சவின் நண்பரா என கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு, நான் எப்படி ராஜபக்சக்களின் நண்பனாக இருக்க முடியும்? எனக்கு தெரிந்த காலத்திலிருந்தே அவர்களுக்கு எதிரானவர். இன்று வெளிநாட்டில் இருந்து வந்து ராஜபக்ச ஆதரவாளரா என்று கேட்கிறீர்கள். இங்கு யாரிடம் கேட்டாலும் அவர்கள் ராஜபக்சவின் நண்பர்களாக இருப்பார்கள்.
ஒரு பத்திரிக்கையாளராக நீங்கள் விரிவாக தேடலில் ஈடுபட வேண்டும், இது போன்ற கேள்விகளை கேட்காதீர்கள் என கோபமாக பதிலளித்துள்ளார்
மேலும் மற்றுமொரு கேள்விக்கு பதிலளித்த ரணில் விக்ரமசிங்க, மக்கள் கோரிய மாற்றத்தை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 12 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்