தலதா மாளிகைக்கு விஜயம் செய்த ரணில் விக்ரமசிங்க
Ranil Wickremesinghe
Sri Lanka
President of Sri lanka
By pavan
சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (30) தலதாமாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலதாமாளிகைக்கு சென்ற அதிபரை தலதாமாளிகையின் தியவடன நிலமே திலங்க தேலபண்டார வரவேற்றுள்ளார்.
புத்தரின் புனித தந்தம் வைக்கப்பட்டுள்ள தலதா மாளிகையின் மேல் மாடியில் உள்ள குடிலுக்கு சென்று அதிபர் மலர்களை வைத்து வழிபாடுகளில் ஈடுபட்ட, பௌத்த பிக்குமாரிடம் ஆசி பெற்றுக்கொண்டார் என அதிபரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முதல் முதலாக சென்றுள்ளார்
ஜூலை 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அதிபர் வாக்கெடுப்பில் சிறிலங்காவின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க தெரிவுசெய்யப்பட்டார்.
அதனையடுத்து, அதிபர் பதவியில் அமர்ந்த பின் முதல் முதலாக இன்று தலதாமாளிகைக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்