லிபரல் முகமூடி அணிந்த இனவாதி ரணில்: அம்பலப்படுத்தும் அரசியல் ஆய்வாளர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) லிபரல் முகமூடி அணிந்த ஒரு இனவாதி என அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரித்துள்ளார்.
குறித்த விடயத்தை அவர் ஐபிசி தமிழின் சக்ரவியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ரணிலினால் உள்நாட்டில் ஒரு தீவிரமான இனவாத்தை காட்ட முடியாது.
அதாவது மகிந்த ராஜபக்ச போல இவரால் யுத்த வெற்றிக்கு தலைமை தாங்க முடியாது, காரணம் இவர் உள்நாட்டில் மிகவும் பலவீனமான தலைவர்.
ஆகவே உள்நாட்டில் பலவீனமானவர் என்பதால் அவர் மீது தற்போதைய அரசு கை வைத்துள்ளது இருப்பினும் சர்வதேச ரீதியில் அவர் மிகவும் பலம் பொருந்தியவர்” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரணிலின் கைது, தற்போதைய அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை, உள்நாடு மற்றும் சர்வதேசத்தில் ரணிலின் அரசியல் நகர்வு, ரணிலின் கைது நடவடிக்கையில் ஒளிந்திருக்கும் அரசியல் மற்றும் நடப்பு அரசியல் குறித்து அவர் தெரிவித்த விரிவான கருத்துக்களுடன் வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய சக்ரவியூகம்,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

