ஜெலன்ஸ்கியை பிடிக்கவில்லை சந்திக்கமாட்டார் புடின் : ட்ரம்ப் அறிவிப்பு
''உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை(volodymyr zelenskyy) ரஷ்ய ஜனாதிபதி புடின் (vladimir putin)சந்திக்க மாட்டார். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை'' என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) தெரிவித்தார்.
உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். அவர் ரஷ்ய ஜனாதிபதி புடினிடம் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் உக்ரைன் ஜனாதிபதி வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்து பேசினார். இதில் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
புடின் ஏன் ஜெலன்ஸ்கியை சந்திக்க தயங்குகிறார்
இந்நிலையில், புடின் ஏன் ஜெலன்ஸ்கியை சந்திக்க இவ்வளவு தயங்குகிறார்? என்று ட்ரம்ப் இடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு ட்ரம்ப் அளித்த பதில்: உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ரஷ்ய ஜனாதிபதி புடின் சந்திக்க மாட்டோர். ஏனெனில் அவருக்கு அவரை பிடிக்கவில்லை. இரண்டு போர்க்கால தலைவர்களும் நேருக்கு நேர் சந்திப்பார்களா என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவர்கள் சந்திக்கலாம்.
ரஷ்ய ஜனாதிபதி புடின்- உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை சந்திக்காவிட்டால் விளைவுகள் ஏற்படும். அடுத்த ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களில் என்ன நடக்கிறது என்பதை பார்த்துவிட்டு அதில் தலையிடுவேன்.
ஒப்பந்தத்தை முடிப்பதற்கு முன்பு அவர்கள் சந்திக்க வேண்டும்
நான் எப்போதும் சொல்வேன். நான் ஒரு சந்திப்பை நடத்தி ஒப்பந்தத்தை முடிப்பதற்கு முன்பு அவர்கள் சந்திக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

