இலங்கையின் மீட்பர் ரணில் மாத்திரமே!! மார்தட்டும் ஐ.தே.க
அனுபவமிக்க தலைவரான ரணில் விக்ரமசிங்கவிடம் இந்த நாட்டை ஒப்படைத்தால் தான் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தன (Ruwan Wijewardene) தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இளைஞர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
“ பொருளாதார நெருக்கடியால் நாடு நாளுக்கு நாள் அதல பாதாளத்திற்குள் சென்று கொண்டிருக்கிறது.
நாட்டில் அந்நிய செலாவணி இருப்பு தற்போது 500 மில்லியன் டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இவ்வாண்டு மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டியுள்ளது.
எவ்வித திட்டமிடலும் அற்ற இந்த அரசாங்கம் இலங்கையை இன்னொரு சோமாலியாவாக மாற்றிய பின்னரே ஆட்சியை விட்டுச் செல்லும்.
நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மாத்திரமேயாகும். வேறு எந்தக் கட்சியாலும் இந்த நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது” என்றார்.
