சுதந்திரக் கட்சிக்கு தூண்டில் போடும் ரணில் தரப்பு!
Maithripala Sirisena
Ranil Wickremesinghe
Wickremesinghe Ranil
Sri Lanka
By pavan
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைப்பதற்குச் சிலர் சூழ்ச்சி செய்தாலும் அக்கட்சி ஆதரவாளர்கள் இடமளிக்கமாட்டார்கள் என்று சுதந்திரக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் துஷ்மந்த மித்ரபால தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது,
சூழ்ச்சிகள்
"சுதந்திரக் கட்சிக்கு இது சவால் மிகு வருடமாகும். தேர்தல்கள் நடைபெறவுள்ளன. எனவே, சூழ்ச்சிகளுக்கு அடிபணியாது கட்சியை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
சுதந்திரக் கட்சியை யானை வாலுடன் முடிச்சுப் போடுவதற்குச் சிற்சில குழுக்கள் முற்பட்டாலும் அக்கட்சி ஆதரவாளர்கள் அதற்கு இடமளிக்கமாட்டார்கள்." - என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 18 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்