பகிரங்க மன்னிப்பு கேட்கத் தயாராகும் ரஞ்சன் ராமநாயக்க
prison
Ranjan Ramanayake
apologize
By Sumithiran
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கடூழிய சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, அரசதலைவரின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படாததால் கவலையடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர் விடுதலை செய்யப்படாமல் உள்ளமையால் சற்றே கோபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுவெளியில் தான் கூறிய கருத்துக்கு மன்னிப்பு கேட்கவும், தனது எதிர்கால திட்டம் தொடர்பிலும் தன்னை சந்திக்க வருபவர்களிடம் தெரிவித்துள்ளதாக தெரிய வருகிறது.
இதன்படி விடுதலையான பின்னர் மீண்டும் அரசியலுக்கு வருவதில்லை என ராமநாயக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நீண்ட நாட்களுக்கு அவுஸ்திரேலியாவில் குடியிருக்கவும் தீர்மானித்துள்ளார்.
