யாழில் பதின்ம வயது சிறுமி துஷ்பிரயோகம் - காவல்துறை உத்தியோகத்தர் கைது
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த காவல்துறை உத்தியோகத்தர் நேற்று செவ்வாய்க்கிழமை(03) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று துஷ்பிரயோகம்
பருத்தித்துறை பகுதியில் 17 வயதான சிறுமி ஒருவரை நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், பின்னர் காணொளி பதிவுகளை எடுத்து அதனை பயன்படுத்தி தொடர்ச்சியாக சிறுமியை துஷ்பிரயோகம் செய்துவந்த நிலையில் சிறுமி சுகயீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சிறுமி வழங்கிய வாக்குமூலம்
இந்நிலையில், சிறுமி தொடர்ச்சியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை அம்பலமானதாகவும் பின்னர் சிறுமி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொியவருகின்றது.
குறித்த சந்தேகநபரை இன்று புதன்கிழமை(04) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
