யுவதி பாலியல் வன்புணர்வு -காவல்துறை உத்தியோகத்தர் கைது
Sri Lanka Police
Sexual harassment
Sri Lanka Police Investigation
By Sumithiran
தனது உறவினரான 20 வயதான யுவதி வீட்டில் தனிமையில் இருந்தவேளை அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட காவல்துறை சார்ஜன்ட் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவில் கடமையாற்றியவர்.
யுவதி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில்
எனினும் அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நிகவெரட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவில் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்ததாகவும் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட யுவதி அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட ரஸ்நாயக்கபுர காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் குறித்த காவல்துறை உத்தியோகத்தரை கைது செய்துள்ளனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்