தேடிவரும் பண அதிர்ஷ்டம்: மகிழ்ச்சியின் உச்சத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா...! இன்றைய ராசிபலன்கள்

Horoscope Astrology Daily Rasi Palan Tamil
By Eunice Ruth May 06, 2024 11:30 PM GMT
Report

இன்று மங்கலகரமான குரோதி வருடம் சித்திரை 24 ஆம் நாள் (2024 ஆம் ஆண்டு மே மாதம் 7 ஆம் நாள்).

ஒரு நாளை தொடங்க முன்னார் அந்த நாளில் என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்வதன் மூலம், நம்மால் ஓராயிரம் பிரச்சினைகளை சமாளிக்க இயலும்.

வேதத்தின் கண்ணாக விளங்கும் ஜோதிடத்தின் மூலம் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்கள் எப்படி இருக்கும், கல்வி, வேலை வாய்ப்பு, வருமானம் மற்றும் திருமண வாழ்க்கை நிலை எப்படி என்ற பலன்களை பார்க்கலாம்.             

மேஷம்

மகிழ்ச்சி நிறைந்த தருணங்களைக் கொண்டதாக இருக்கும். உங்கள் நேர்மையான முயற்சி மூலம் நீங்கள் பல ஆச்சரியங்களைப் புரிவீர்கள். ஆன்மீக காரியங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கும். பணிச்சூழல் சாதகமான பலன்களைக் கொடுக்கும். பணிகளைப் பொறுத்தவரை நீங்கள் திட்டமிட்டபடி நடக்கும். அதனால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியான தருணங்களை பகிர்ந்து கொள்வீர்கள். உங்கள் மனதில் மிகுந்த திருப்தி காணப்படும். பணவரவு அதிகமாக காணப்படும். இருக்கும் பணத்தை பங்குகளில் முதலீடு செய்து பயனடையலாம். ஆரோக்கியப் பிரச்சினைகளிலிருந்து விடுதலை அடைவீர்கள். திருப்தியான மனநிலை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்...! இன்றைய ராசி பலன்கள்

ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்த வேண்டிய மூன்று ராசிக்காரர்கள்...! இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்

முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். உங்களிடம் மறைந்திருக்கும் திறமைகள் மற்றும் செயல் திறன்களை வெளி உலகிற்கு வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். மிகுந்த தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. உங்கள் திறமைகள் வெளிப்படும். உங்கள் பணிகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். உங்கள் துணையுடனான அணுகுமுறையில் நேர்மையுடன் காணப்படுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். சேமிக்கவும் செய்வீர்கள். இது உங்களுக்கு திருப்தி அளிக்கும். உங்கள் தைரியம் மற்றும் திருப்தியான மனநிலை காரணமாக உங்களின் ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.

மிதுனம்

மிகுந்த செயல்பாடுகள் காணப்படாது. சவாலான நேரங்களில் பதட்டப்பட நேரிடும் என்பதால் உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த வேண்டும். உங்கள் குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய கவலை இருக்கும். பணிச்சூழலில் ஸ்திரத்தன்மை காணப்படாது. இதனால் உங்கள் பணிகளை திறமையுடன் கையாள முடியாது. சகபணியாளர்களின் ஆதரவு கிடைக்காது. மேலதிகாரிகளின் அங்கீகாரம் கிடைக்காது. உங்கள் அன்பை உங்கள் துணையிடம் வெளிப்படையாக கூற இயலாது. உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கான உற்சாகமான மனநிலை உங்களிடம் காணப்படாது. தேவையற்ற மனஉளைச்சல்கள் காரணமாக உங்கள் ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்காது. பணத்தட்டுப்பாடு காணப்படும். அதிகரிக்கும் பொறுப்புகள் காரணமாக பணத்தை சேமிக்க இயலாத நிலை காணப்படும். இது உங்களுக்கு கவலையை ஏற்படுத்தும்.

கடகம்

உறுதியான முடிவுகள் கிடைப்பதற்கு உகந்த நாள் அல்ல. நீங்கள் சில சௌகரியங்களை இழக்க நேரிடலாம். அது உங்களுக்கு கவலையைத் தரும். அமைதியுடனும் உறுதியுடனும் இருக்க வேண்டியது அவசியம். கடுமையான பணிச்சுமை சவாலாக இருக்கும். அத்தகைய சூழ்நிலைகளை கையாள்வதை கடினமாக உணர்வீர்கள். அதிக வேலை காரணமாக களைத்துப் போவீர்கள். உங்கள் துணையுடன் எளிதான அணுகுமுறை தேவை. பணத்தை கவனமாகக் கையாள வேண்டும். பண இழப்பிற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. உங்கள் தாயின் உடல் நிலை உங்களுக்கு கவலை அளிக்கும்.

அதிர்ஷ்டம் கிட்டவுள்ள ராசிக்காரர்கள்! இன்றைய ராசி பலன்கள்

அதிர்ஷ்டம் கிட்டவுள்ள ராசிக்காரர்கள்! இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்

சுமூகமான பலன்கள் கிடைக்கும். நீங்கள் தொடங்கும் காரியங்களில் வெற்றி பெறுவதற்கான அதிர்ஷ்டம் காணப்படுகின்றது. மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உங்கள் பணிகளை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே முடித்து விடுவீர்கள். அதனால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உங்கள் துணையிடம் நேர்மை மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துவீர்கள். இதனால் மகிழ்ச்சியும் நல்ல புரிந்துணர்வும் ஏற்படும். பண வளர்ச்சி காணப்படுகின்றது. பாதுகாப்பான வளமான நிலை மகிழ்ச்சியை அளிக்கும். மனதில் நேர்மறை எண்ணங்கள் காணப்படும். உங்களிடம் காணப்படும் உயர்ந்த ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கை உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

கன்னி

உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உங்கள் செயல்கள் மூலம் உங்கள் திறமைகளை நிரூபிப்பீர்கள். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் செயல்பாட்டிற்காக மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். செய்வதற்கு அரிதான பணிகளையும் நீங்கள் எளிதில் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் ஆழ்ந்த ஒட்டுதலை உண்டாக்கிக் கொள்வீர்கள். உங்கள் துணையாரும் நேர்மையுடன் நடந்து கொள்வார். நல்லிணக்கத்தை வளர்க்கும் வகையில் நீங்கள் உங்கள் துணையுடன் ஒரு முக்கியமான முடிவு எடுப்பீர்கள். உங்களுக்கு பயனளிக்கத்தக்க முதலீடுகளை செய்வதற்கு உகந்த நாள். பணத்தை சேமிப்பீர்கள். உங்களது மகிழ்ச்சியான மனநிலை காரணமாக நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் காணப்படுவீர்கள்.

துலாம்

உங்கள் செயல்களை முறையாக திட்டமிட்டு செய்வதன் மூலம் நற்பலன்களைக் காணலாம். தவறான முடிவுகள் எடுப்பதற்கு வாய்ப்புள்ள காரணத்தால் எந்தவொரு முடிவையும் யோசித்து எடுங்கள். பெரியவர்களிடம் ஆலோசனை கேட்டு நடப்பது நல்லது. பணி நிமித்தமான பயணங்கள் காணப்படும். உங்களுக்கு இடப்பட்ட பணிகளை குறித்த நேரத்திற்குள் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். கூடுதல் செலவினங்கள் காணப்படும். சேமிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. பற்களில் வலி வருவதற்கு வாய்ப்புள்ளதால் அதில் கவனம் செலுத்தி மருத்துவம் செய்து கொள்ள வேண்டும்.

மனம் வருந்தப்போகும் ராசிக்காரர்கள் நீங்களா...! இன்றைய ராசிபலன்கள்

மனம் வருந்தப்போகும் ராசிக்காரர்கள் நீங்களா...! இன்றைய ராசிபலன்கள்

விருச்சிகம்

உறுதியான பலன்கள் கிடைக்காது. அசாதாரணமான சூழ்நிலையை தவிர்க்க நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டும். நீங்கள் பேசும் பொழுது உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள். திறமையாக பணியாற்றுவதற்கு தடைகள் காணப்படும். சகபணியாளர்களுடன் சுமூகமான உறவு காணப்படாது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு காணப்படும். உங்கள் துணையுடன் பேசும் போது கவனமாக இருக்கவும். தவிர்க்க முடியாத செலவினங்கள் காணப்படுகிறது. எனவே, உங்கள் செலவினங்களை கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற செலவினங்களும் ஏற்படலாம். முதுகு வலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. கண்களுக்கு மருத்துவம் மேற்கொள்வது நல்லது. வேலையின் காரணமாக நீங்கள் களைத்துப் போவீர்கள்.

தனுசு

இந்த ராசிகாரர்களுக்கு இந்த நாள் சாதகமான நாளாக அமையும். நீங்கள் உற்சாகமாக இருப்பீர்கள். உங்கள் செயல்களில் எளிதாக வெற்றி அடைவீர்கள். பெரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியில் உங்கள் நிலையில் வளர்ச்சி காணப்படும். வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். அவை உங்களுக்கு திருப்திகரமாக இருக்கும். உங்கள் மேலதிகாரிகளும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். உங்கள் வீட்டில் நடக்கவிருக்கும் ஒரு முக்கியமான விழா தொடர்பாக உங்கள் துணையுடன் பயனுள்ள விவாதத்தில் ஈடுபடுவீர்கள். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் அளவிற்கு கணிசமான தொகை சம்பாதிப்பீர்கள். உங்கள் வங்கியிருப்பு அதிகரிக்கும். திடமான தேக ஆரோக்கியம் காணப்படும். மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். அது உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

மகரம்

அதிக சிந்தனைவயப்பட்டவர்களாக இருப்பீர்கள். விஷயங்களை சாதாரணமாக எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். தியானம் மேற்கொள்ளுங்கள். அது உங்களுக்கு நல்ல பலனளிக்கும். பணிநிமித்தமான பயணங்கள் காணப்படும். பணியில் நிறைய சவால்களை சந்திக்க நேரும். கடுமையான வேலை காரணமாக சோர்ந்து காணப்படுவீர்கள். உங்கள் துணையுடனான தொடர்பாடலின் பொழுது பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்கு உங்கள் அகந்தை போக்கு காரணமாக இருக்கலாம். எனவே, அத்தகைய நடத்தையை தவிர்க்க வேண்டும். பண அதிர்ஷ்டம் பிரகாசமாக இல்லை. தொலை தூரப் பிரதேசத்திலிருந்து நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் பணம் கிடைக்க தாமதமாகலாம். மன அழுத்தம் காரணமாக கால்களில் வலி ஏற்படலாம். அதிக வேலையின் காரணமாகவும் பிரச்சினைகள் ஏற்படலாம்.

குரு பெயர்ச்சி 2024: கல்யாண யோகம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்...!

குரு பெயர்ச்சி 2024: கல்யாண யோகம் கிட்டவுள்ள மூன்று ராசிக்காரர்கள்...!

கும்பம்

உற்சாகமும் ஆற்றலும் நிறைந்து காணப்படும். உங்கள் திட்டங்களை செயலாற்றத் தொடங்குவதற்கு மிகச் சரியான நாள். உங்கள் தொழில் சம்பந்தமான பயணம் காணப்படும். உங்கள் தகவல் பரிமாற்றத் திறமை காரணமாக நீங்கள் பாராட்டு பெறுவீர்கள். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உறவு நிலை சாதாரணமாக காணப்படும். நிதிநிலைமை சிறப்பாக உள்ளது. பயனுள்ள சிறு சிறு செலவுகளை மேற்கொள்வீர்கள். அழகுப் பராமரிப்பு, மருந்து வாங்குதல் போன்றவற்றிற்கு செலவு செயவீர்கள். முழுமையான ஆரோக்கியம் காணப்படும். நீங்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். 

மீனம்

மகிழ்ச்சியும்; சந்தோஷமும் நிறைந்து காணப்படும். நிலுவையிலுள்ள பணிகளை செய்து முடிப்பீர்கள். ஆன்மீக அனுபவங்களைக் கண்டு மகிழலாம். உங்கள் பணி சிறப்பாக இருக்கும் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். பணியிடச் சூழல் அமைதிகரமாக இருக்கும் எளிதாகப் பணியாற்ற முடியும். உங்கள் துணையுடன் சிறப்பாக நேரத்தை கழிப்பீர்கள். அவர்களின் அன்பும் ஆதரவும் உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். நிதிநிலைமை சுமாராக இருக்கும். உங்கள் குடும்பத்திற்கென பணம் செலவு செய்வீர்கள். எனினும், கவனமாக பணம் செலவு செய்ய வேண்டும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். 

நிதி நெருக்கடியை சந்திக்கப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்

நிதி நெருக்கடியை சந்திக்கப்போகும் ஐந்து ராசிக்காரர்கள்! இன்றைய ராசிபலன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 9

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Toronto, Canada

23 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026