சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு! விபத்துக்குள்ளான பயணிகள் பேருந்து
இரத்தினபுரி நிவிதிகல மரபான பிரதேசத்தில் பேருந்தை செலுத்திய சாரதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
இஷங்க கருணாரத்ன என்ற 30 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.
குறித்த சாரதி பேருந்தை செலுத்தியபோது ஏற்பட்ட மாரடைப்பினால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாததால் பேருந்தானது கடை ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
மரண விசாரணை
இந்நிலையில் இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற மரண விசாரணையின் போதே சாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
விசாரணையில் சாட்சியமளித்த நடத்துனர் கிரிஷாந்த தெரிவிக்கையில், "இறந்தவரும் நானும் நிவிதிகல இரத்தினபுரி தனியார் பேருந்தில் பணிபுரிந்தோம்.
நான் அங்கு நடத்துனராகவும், இறந்தவர் சாரதியாகவும் பணிபுரிந்தோம். சம்பவத்தன்று இரவு எட்டு மணியளவில் இரத்தினபுரியில் இருந்து நிவித்திகல வரை எமது பேருந்தின் கடைசிப் பயணத்தை முன்னெடுத்தோம்.
விபத்து
பயணிகளை இறக்கி விட்டு பேருந்து உரிமையாளர் வீட்டிற்கு செல்வதற்காக மாரப்பனை நோக்கி பயணித்தோம். இதன் போது சாரதியினால் பேருந்தை கட்டுப்படுத்த முடியாமல் காட்டு பக்கம் செல்வதனை அவதானித்தேன்.
எனினும் அவர் அவ்வாறு செல்ல விடமால் தடுத்து இடது பக்கம் திருப்பும் போது பேருந்து கடை ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
எனினும் அவர் மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்துள்ளார் என பின்னரே தெரியவந்துள்ளது" என தெரிவித்திருந்தார்.