பிரதமர் மஹிந்தவை அவமானப்படுத்தும் செயல்! வெளிப்படுத்திய ஹக்கீம்
கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதாக அண்மையில் பிரதமர் தெரிவித்த கருத்தை, ஆளும் தரப்பினர் ஏற்றுக்கொள்ளாதமை அவரை அவமானப்படுத்தும் செயற்பாடு என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் பேசிய அவர், கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதாக அண்மையில் அவர் தெரிவித்த கருத்தை, ஏற்றுக்கொள்ளாதமை அவரை அவமானப்படுத்தும் செயற்பாடாகும்.
இவ்வாறு பிரதமரின் கருத்தை புறக்கணிப்பதற்கும் அவரை அவமானப்படுத்துவதற்கு என ஒருசில தரப்பினர் செயற்பட்டு வருவதாகவும் இவ்வாறான நடவடிக்கை மூலம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவமதித்துள்ளமை தெளிவாகியுள்ளது.
அரசாங்கத்திற்குள்ளேயே இடம்பெறும் இந்த மோதல் அவர்கள் சரியான கொள்கையை பின்பற்றவில்லை என்பதையே காட்டுகிறது என்றார்.