IPKF நடவடிக்கையின்போது விடுதலைப்பு புலிகளின் தலைவருக்கு கிடைத்த முக்கிய உதவி!
இந்திய அமைதிப்படை இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்கு எதிராக தாக்குதலை மேற்கொண்டபோது அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு முஸ்லிம் குடும்பம் ஒன்று சில உதவிகளை வழங்கியதாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
குறித்த உதவிகள் சிலாபத்தில் உள்ள குடும்பம் ஒன்றினால் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தை
மேலும் கருத்து தெரிவித்த அவர்,“ குறித்த முஸ்லிம் குடும்பம் தனக்கு செய்த உதவிகளை ஒரு போதும் மறக்க மாட்டேன் என எனக்கு கூறியிருந்தார்.

சமாதானப் பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகளின் தலைவரையும், அவரது குழுவினரையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அதன்போது, கிளிநொச்சியில் எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைக்கப்பெற்றது. அது சாமானியமான ஒரு வரவேற்பு அல்ல. ஒரு நாட்டுத் தலைவரை வரவேற்பது போல், நாங்கள் பயணிக்கும் வீதியின் இரு புறத்திலும் விடுதலைப் புலிகளின் பெண் போராளிகள் மரியாதை செலுத்தினர்.
பேச்சுவார்த்தைகள் நான்கரை மணித்தியாலங்கள் இடம்பெற்றதுடன், அதனிடையே பேச்சுவார்த்தையை நிறுத்தி எங்களுக்கு தொழுவதற்கான நேரத்தையும் ஒதுக்கி தந்திருந்தார்.
ஹலால் உணவுகளை வழங்கி, எங்களுக்கு அனைத்து மாமிசங்களுடனும் உணவு தாயார் செய்திருந்தார்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |