அனைத்து வணிக வளாகங்களையும் மீண்டும் திறக்க அரசாங்கம் திடீர் அனுமதி!
corona
sri lanka
people
By Shalini
சுகாதார பரிந்துரைகளின்படி நாடு முழுவதும் உள்ள வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதித்துள்ளது.
சுகாதார சேவைகள் இயக்குநரால் நேற்று வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களில் அனைத்து வணிக வளாகங்களையும் மூடுமாறு கூறியுள்ளார்.
எனினும் இன்று குறித்த சுகாதார வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டு வணிக வளாகங்களை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய திருத்தத்திற்கு அமைய அனைத்து வணிக வளாகங்களும் திறக்கலாம்.
ஒரே நேரத்தில் 25 சதவீத வாடிக்கையாளர்களுக்கே இடமளிக்க முடியும் என்றும் கூறுகிறது.
கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நிறுவனத்திற்கு வெளியே காட்டப்பட வேண்டும் என்றும் மேலும் கூறுகிறது.