மீண்டும் திறக்கப்படுகிறதா யாழ். சர்வதேச விமான நிலையம்..!! எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
Douglas Devananda
Nimal Siripala De Silva
Ranil Wickremesinghe
Jaffna International Airport
Angajan Ramanathan
By Vanan
ரணில் விக்ரமசிங்கவின் அறிவுறுத்தல்
யாழ். சர்வதேச விமான நிலையத்தை மீளவும் திறந்து சுற்றுலாத்துறையை ஊக்குவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ள நிலையில், துறைமுகங்கள் கப்பற்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்று(18) பலாலிக்குச் சென்று கள ஆய்வில் ஈடுபட்டுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து தமிழகத்திற்கான படகு சேவையை ஆரம்பிப்பது தொடர்பிலும் அமைச்சர் தனது கள விஜயத்தில் ஆராய்ந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திற்கு வருகைத் தந்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை யாழ். புகையிரத நிலையத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றிருந்தார்.
எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை
அத்துடன் கொழும்பிலிருந்து அமைச்சருடன் வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் கள விஜயத்தை மேற்கொண்டு காங்கேசன்துறை துறைமுகத்தை பார்வையிட்டிருந்தார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்