அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட தயார் : மைத்திரிபால சிறிசேன
Srilanka Freedom Party
Maithripala Sirisena
Sri Lanka
Election
By Sathangani
சிறிலங்காவில் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கைகள் விடுக்கப்படுமானால் அதனை ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
''2015 இல் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றேன், எனினும், எனக்கு தேவையானவற்றை செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அரசியலில் ஈடுபடுவேன்
நிறைவேற்று அதிகார அதிபராக இருந்தாலும் நாடாளுமன்றத்தின் அதிகாரம் இல்லாவிட்டால் உரிய வகையில் செயற்பட முடியாது.

எனது கொள்கை ரீதியிலான அரசியலை முன்னெடுக்கவே நாடாளுமன்ற தேர்தலில் கூட போட்டியிட்டேன், முதுகெலும்பு இருக்கும் வரை அரசியலில் ஈடுபடுவேன்'' என்றார்.
இது தொடர்பான மேலும் பல செய்திகளை இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பில் காண்க.
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்