அரசு பக்கம் சாய்கிறார் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்
Government Of Sri Lanka
Vadivel Suresh
By Sumithiran
மலையக மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்தால் மக்கள் பிரதிநிதிகள் என்ற ரீதியில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
அரசு திட்டங்களை செயல்படுத்தி மலைவாழ் மக்களுக்கு நிவாரணம் வழங்கினால் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் அரசுக்கு முழு ஆதரவை வழங்க தயாராக உள்ளோம் என்றார்.
நாடாளுமன்றத்தில் பல சட்டமூலங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் இருவர் அரசிற்கு ஆதரவு

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, மற்றும் டொக்டர் ஹப்புகாமி ஆகியோர் அரசிற்கு ஆதரவளிக்க தயார் என தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி