உக்ரைனின் ஊடுருவலுக்கு பிரித்தானியாவே காரணம்: திசை மாறும் ரஷ்யாவின் நகர்வு
உக்ரைன் (UKraine) இராணுவம் ரஷ்யாவுக்குள் (Russia) புகுந்து அதிரடி தாக்குதலை நடத்த காரணம் பிரித்தானியா (UK)தான் என மூத்த அரசியல்வாதியும் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவருமான அடல்பி ஷ்காகோஷேவ் (Adalbi Shkhagoshev) தெரிவித்துள்ளார்.
அண்மையில் ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் இராணுவம் புகுந்து எல்லை தாண்டிய தாக்குதல்களை தீவரப்படுத்தியதுடன், தற்போது ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்களும் முகாமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) அவசர நிலை பிரகடனம் அறிவித்து, உக்ரைன் படைகள் ஊடுருவியுள்ள பகுதியில் இருந்து 17 மைல்கள் தொலைவில் அமைந்துள்ள குர்ஸ்க் அணு உலையை பாதுகாக்க வாக்னர் படையை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பிரித்தானியாவின் பங்கு
இந்த நிலையில், உக்ரைனின் இதுபோன்ற நடவடிக்கைகளின் பின்னால் கட்டாயம் பிரித்தானியாவின் பங்கு இருக்கும் என அடல்பி ஷ்காகோஷேவ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதேவேளை, உக்ரைனின் இந்த நடவடிக்கை ரஷ்யாவை தூண்டிவிடும் செயல் என்றும் ரஷ்ய ஜனாதிபதி புடின் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |