இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் இதுதான்: சரித் அசலங்க விளக்கம்
ஆடுகள மாற்றங்களுக்கு ஏற்ப மாற முடியாமல் போனதே இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் என இலங்கை அணியின் உப தலைவர் சரித் அசலங்க (Charith Asalanka) தெரிவித்துள்ளார்.
ஆடுகளங்கள் ஒரேயடியாக மாறுகின்றன, இதனால் பந்து பழையதாகி சுழல ஆரம்பிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்
நேற்று (11.6.2024) இடம்பெற்ற போட்டிப் பயிற்சியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே சரித் அசலங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆடுகள மாற்றங்களும் காரணம்
குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், ஒரு துடுப்பாட்ட வீரர்களாக நாம் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். 06 ஓவர்களில் 50 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை கொடுத்துவிட்டு இப்படியான பேட்டிங் லைனில் 125 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க முடியாது.
நான் உட்பட ஒவ்வொரு துடுப்பாட்ட வீரரும் பொறுப்பேற்க வேண்டும், இலங்கையில் நாங்கள் நன்கு பயிற்சி செய்து தயாராகி இருந்தோம்.
ஆனால் ஆடுகள மாற்றத்திற்கு ஏற்ப எம்மால் மாற முடியாமல் போனது. மற்ற மைதானங்களில் 06 ஓவர்களில் 50/55 ஓட்டங்கள் இருந்தால், நாங்கள் 180 ஓட்டங்களை எடுக்க முயற்சிப்போம்.
தோல்விக்கு காரணம்
இங்கு, ஆடுகளங்கள் ஒரேயடியாக மாறுகின்றன, மேலும் பந்து பழையதாகி சுழல ஆரம்பிக்கிறது.
நாங்கள் அதற்கு உடனடியாக மாற வேண்டும், ஓட்டங்களை குறைத்து விக்கெட்டுக்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். எம்மால் அதை செய்ய முடியாமல் போனதே தோல்விக்கு காரணம் உப தலைவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |