ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகியதற்கான காரணத்தை வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகுவதற்கு சஜித் பிரேமதாசவின்(Sajith Premadasa) தலைமைத்துவ குறைபாடுகளே காரணம் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) தவிசாளர் பதவியிலிருந்து பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா விலகியுள்ளதுடன் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், “தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு நான் ஆதரவு வழங்கவில்லை. அப்படி ஆதரவு வழங்குவதாயின் நான் கட்டுப்பணம் செலுத்தியிருக்கமாட்டேன்.
மோசடியான அரசியல்
மேலும், ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகுவதற்கு சஜித் பிரேமதாசவின்(Sajith Premadasa) தலைமைத்துவ குறைபாடுகளே காரணம்.
மோசடியான அரசியல் கலாசாரத்தை நீக்காவிடின் நாட்டை முன்னேற்ற இயலாது. அத்துடன், நாடு நெருக்கடியில் தவித்த போது தப்பியோடியவர்கள் இன்று வேட்பாளர்களாக உள்ளனர்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் விடயம் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குழிதோண்டிப் புதைத்து விடும்! சாணக்கியன் பகிரங்கம்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |