மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படமாட்டார் : அதற்கான காரணங்கள்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) கடந்த 22ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ஏனைய முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பான விடயங்கள் பொசுபொருளாக மாறியுள்ளதுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) கைது செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே மகிந்த ராஜபக்ச கைது செய்யப்படுவார் எனவும் அவர் கைது செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லை எனவும் பலரும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இவ்வாறிருக்கையில் தன்மீது 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் ஆனால் தன்னை எதுவும் செய்ய முடியவில்லை எனவும் மகிந்த கருத்து வெளியிட்டுள்ளார்.
நீங்கள் வேண்டுமென்றால் ராஜபக்சர்கள் மீது வழக்குகளை பதிவுசெய்யுங்கள், எங்கள் மீது குற்றம் இருந்தால் அந்தக் குற்றங்களுக்கான ஆதாரங்கள் உங்களிடம் ஆதாரம் இருந்தால் வழக்குகளை பதிவு செய்யுங்கள். நாங்கள் வழக்குகளை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம் என தெரிவித்திருக்கின்றார்.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்ச இழைத்த குற்றங்களுக்காக கைது செய்யப்படவோ தண்டனைகளுக்கு உட்படுத்தப்படவோ முடியாதவர்களாக தான் இருப்பார்கள் எனவும் அது மேற்குலகின் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிரல் எனவும் சொல்லப்படுகின்றது.
அத்துடன் 2009 இன் பின்னர் நாமல் ராஜபக்சவால் Ground pinitrating Rader ஐ பயன்படுத்தி புதையல் தோண்டப்பட்டதாக சொல்லப்படுகின்ற இடங்கள் பற்றிய விபரங்கள்.
ரணில் கைது மேற்கின் நிகழ்ச்சி நிரல், மத்தியவங்கி பணமுறி விபரங்கள் கண்டு கொள்ளப்படாது, ரணிலின் கைது விபரங்களை மக்கள் விளங்கிக் கொள்ளுகின்ற விதம் தொடர்பான பல்வேறு விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க....
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

