வரி அதிகரிப்பால் குறைந்த வாகன இறக்குமதி! அமைச்சர் வெளியிட்ட தகவல்
வாகன இறக்குமதிக்கான நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்படும் வீதம் கணிசமாகக் குறைந்துள்ளதாக பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (23-07-2026) உரையாற்றிய போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வாகன இறக்குமதிக்காகத் திறக்கப்பட்ட நாணயக் கடன் கடிதங்களின் சராசரி மதிப்பு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டது.
எனினும், கூடுதல் தீர்வை வரி விதிக்கப்பட்டதன் பின்னர் இந்த நிலைமையில் பெருமளவிலான மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த ஜூலை 20ஆம் திகதி 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் ஜூலை 21ஆம் திகதி 1.9 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் மாத்திரமே நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கூடுதல் தீர்வை வரி நடைமுறைக்கு வந்த மே மாதம் 15ஆ ம் திகதியன்று மாத்திரம் 23.71 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் நாணயக் கடன் கடிதங்கள் திறக்கப்பட்டிருந்தது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 22 மணி நேரம் முன்