மாணவர் விசாவில் கனடாவின் அதிரடி மாற்றம்!
மாணவர் விசாவில் வருபவர்களிடம் முகவர்கள் செய்யும் மோசடிகளை தடுக்க கனடா அரசாங்கம் புதிய விதிகளை அறிவித்துள்ளது.
அதன்படி கனடாவில் முதுகலை கல்வி கற்பிக்கும் அனைத்து கல்வி நிறுவனங்களும், ஒவ்வொரு விண்ணப்பதாரரின் ஏற்பு கடிதத்தையும் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அமைச்சகத்துடன் சரி பார்க்க வேண்டும்.
ஒவ்வொரு கல்வி நிறுவனங்களும் அமைச்சகத்திடம் இருந்து சரி பார்க்கப்பட்ட ஏற்றுக் கொள்ளும் கடிதத்தை பெற வேண்டும்.
புதிய கொள்கை
இந்த புதிய கொள்கை வருகிற டிசம்பர் முதலாம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அமைச்சர் மார்க் மில்லர் கூறுகையில்,
“கனடாவுக்கு வரும் பிற நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த விரும்பவில்லை.
பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் ஏமாற்றப்படாமல் பாதுகாப்பதே தனது நோக்கம்.
இந்த நடவடிக்கை இதற்கு முன்பு மாணவர்கள் ஏமாற்றப்பட்டதைப் போன்ற சூழல் ஏற்படாமல் தடுக்கும் என்பதுடன், உண்மையான ஏற்பு கடிதங்களின் அடிப்படையில் மட்டுமே படிப்பதற்கான அனுமதி வழங்கப்படுவதையும் உறுதி செய்யும்.” என்றார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
