யாழில் கொரோனோ தொற்றால் பெண் ஒருவர் மரணம்
COVID-19
Jaffna
Death
By Shadhu Shanker
யாழ் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்கு பின்னர் கொரோனோ தொற்று காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆயுர்வேத சிகிச்சைக்காக வந்த 62 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் வட்டுக்கோட்டை அராலியில் தங்கியிருந்த நிலையில் காய்ச்சல் காரணமாக இரண்டு நாட்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
கொரோனா தொற்று
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை(12) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பின் பின் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று(15) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த (11)ஆம் திகதி குருநாகல் போதனா வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்