ஈரானில் அடுத்தடுத்து பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்!
புதிய இணைப்பு
ஈரானின் மேற்குப்பகுதியான கெர்மன்ஷா மாகாணத்தில் 5.7 ரிக்டர் அளவிலான மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் உள்ளூர் நேரப்படி காலை 7:18 மணிக்கு (03:43 GMT) பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நிலநடுக்கத்தின் தாக்கம் மற்றும் உயிரிழப்புக்கள் குறித்து அதிகாரப்பூர்வ அறிக்கைகள் இதுவரையில் வெளியாகவில்லை.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள நிலைமைகளை மதிப்பிடுவதற்காக, மதிப்பீட்டுக் குழுக்களும் அவசரகால மீட்புப் பிரிவுகளும் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
ஈரானில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஈரானின் மேற்குப்பகுதியான கெர்மன்ஷா மாகாணத்தில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கெர்மன்ஷா மாகாணத்தில் உள்ள குசரான் அருகே 8 கி.மீ (5 மைல்) ஆழத்தில் ரிக்டர் அளவுகோலில் 5.2 நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கம் குறித்து தெஹ்ரான் பல்கலைக்கழகத்தின் ஈரானிய நிலநடுக்கவியல் மையத்தை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தின் தாக்கம்
உள்ளூர் நேரப்படி காலை 7:13 மணிக்கு (03:43 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மையப்புள்ளி குசாரானிலிருந்து 17 கி.மீ தொலைவிலும், மாகாணத் தலைநகரான கெர்மன்ஷாவிலிருந்து 65 கி.மீ தொலைவிலும் அமைந்திருந்ததாகவும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மீண்டும் வெடித்தது அமெரிக்கா - ஈரான் போர்! உடன்படிக்கை முறிந்து உள்கட்டமைப்புகள் மீது பரஸ்பர தாக்குதல்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்