கடும் கண்டனத்துடன் ஜென் Z தலைமுறையினர்! நாமலின் கைது குறித்து ஐ.தே.க அறிக்கை
பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவை, இலஞ்சம் - ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழு (CIABOC) கைது செய்ததை ஐக்கிய தேசியக் கட்சி (UNP) வன்மையாகக் கண்டித்துள்ளது.
நாமல் ராஜபக்சவின் தலைமையில் செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரத்தில் நடைபெறவுள்ள மக்கள் பேரணியைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக்காட்டி என ஐக்கிய தேசியக் கட்சி ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பொதுஜனப் கட்சியின் தேசிய அமைப்பாளர் என்ற முறையில், தேசிய மக்கள் சக்தி (NPP) தலைவர் அனுர குமார திசாநாயக்கவைப் போலவே நாமல் ராஜபக்சவிற்கும் நாடு முழுவதும் பயணம் செய்து பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு அதே ஜனநாயக உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டும் என்றும் அறிக்கையில் கூறியுள்ளது.
அதிகரித்து வரும் பலவீனம்
எந்தவொரு நவீன, நாகரிக சமூகமும் ஒரு தனிநபரின் அத்தகைய ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதை அங்கீகரிக்காது என்றும், குறிப்பாக ஜென் Z தலைமுறையினர் இத்தகைய செயல்களைக் கடும் கண்டனத்துடன் பார்க்கிறார்கள் என்றும் ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

மக்கள் ஆதரவு குறைந்து வரும் நிலையில், NPP அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் அதன் அதிகரித்து வரும் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |