இணையத்தில் பகிரப்பட்ட பெண்ணின் தவறான புகைப்படங்கள்: முன்னாள் கணவர் கைது
பெண்ணொருவரின் தவறான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் கினிகத்தேன பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்ட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், அதிகாரிகளுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து நேற்று (03-09-2026) பிற்பகல் கினிகத்தேன பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் முன்னர் முறைப்பாட்டாளரான பெண்ணைத் திருமணம் செய்திருந்தவர் என்பதும், பின்னர் அவரிடமிருந்து சட்டப்பூர்வமாகப் பிரிந்த பின்னரே இக்குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளார் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை: இச்சம்பவம் தொடர்பாகக் கண்டி கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |