டித்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகளை புதிதாக நிர்மாணிக்கும் பணி ஆரம்பம்!
டித்வா சூறாவளியால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு நாளை (09.01.2026) அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளது.
இவ்வாறு சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணி Rebuilding Sri Lanka' வேலைத் திட்டத்தின் கீழ் இடம்பெறவுள்ளது.
புதிய வீடுகள்
அதன்படி, அனுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனய, சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதீகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் டித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும்.

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
லசந்தவுக்கான நீதியை வழங்குமா அநுர அரசு! 1 நாள் முன்