உயிரிழந்த யாசகரிடம் இருந்து பெருந்தொகை பணம் மீட்பு!
Srilanka
death
money
Matara
Recovery
beggar
By MKkamshan
மாத்தறையில் ஹக்மன பிரதேசத்தில் வசித்து வந்த யாசகர் ஒருவர் நேற்று மலையிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 69 வயதான ஹக்மான கொங்கல. தி. விமலதாச என்ற யாசகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது காற்சட்டை பையில் இருந்து சுமார் 4 இலட்சம் ரூபாய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 500 ரூபாய், 5,000 ரூபாய், 15,000 ரூபாய் என வைக்கப்பட்டிருந்த பணத்தொகைகளும் கண்டெடுக்கப்பட்டது.
உயிரிழந்தவருக்கு உறவினர்கள் எவரும் இல்லை எனவும் ஹக்மன பிரதேசத்தில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்தி வந்தவர் எனவும் முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
