கொழும்பில் ஹோட்டல் கழிப்பறையில் இருந்து மீட்கப்பட்ட தோட்டாக்கள்
கொழும்பில் (Colombo) ஹோட்டல் ஒன்றிலுள்ள கழிப்பறை குப்பைத் தொட்டியில் இருந்நு தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கோட்டையில் உள்ள ஒரு ஹோட்டல் கழிப்பறையில் உள்ள குப்பைத் தொட்டியில் இருந்தே இவ்வாறு தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில், 17 தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்டதாக புறக்கோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குப்பைத் தொட்டி
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கழிப்பறையை சுத்தம் செய்யச் சென்றபோது குப்பைத் தொட்டியில் துப்பாக்கி தோட்டாக்கள் இருப்பதைக் கண்ட ஊழியர்கள் இது தொடர்பாக காவல்துறையனருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதையடுத்து, குறித்த இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக விசாரணை
இது தொடர்பான பரிசோதனையில் 9MM வகை தோட்டாக்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
யாரோ ஒருவர் கழிப்பறைக்குள் நுழைந்து குப்பைத் தொட்டியில் தோட்டாக்களை கொட்டியிருக்கலாம் என காவ்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புறக்கோட்டை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
