ரஷ்ய இராணுவத்திற்கு பேரடி : இழந்த நிலங்களை மீட்டது உக்ரைன்
ரஷ்ய(Russia) இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்கள் நாட்டின் பிராந்திய பகுதிகளை மீட்டுள்ளதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொளியில், இம் மாத ஆரம்பத்தில், ரஷ்ய படையினர் ஆக்கிரமித்து உள்நுழைந்த, கார்கிவ் பிராந்தியத்தின் சில எல்லைப் பகுதிகள் தற்போது தமது படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே சண்டை நீடித்து வரும் நிலையில், வடகிழக்கின் பிராந்தியத்தை கைப்பற்றுவதற்காக தீவிர தாக்குதல் நடந்து வருகிறது.
முன்னேறும் ரஷ்ய இராணுவம்
ரஷ்ய எல்லைக்கு 5 கி.மீ. தொலைவில் உள்ள வாவ்சான்ஸ்க் நகரில் பாதியை ரஷ்ய படையினர் கைப்பற்றியுள்ளதாக, ரஷ்ய நாடாளுன்ற உறுப்பினர் விக்டர் வொடோலட்ஸ்கி (Victor Vodolatsky) தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன்
வாவ்சான்ஸ்க் நகரை முழுமையாகக் கைப்பற்றிய பின்னர், அருகிலுள்ள டொனட்ஸ்க் பிராந்தியத்தின் ஸ்லோவியான்ஸ்க், க்ரமடார்ஸ்க், போக்ரொவ்ஸ்க் ஆகிய நகரங்களையும் கைப்பற்றுவதற்காக ரஷ்ய இராணுவம் முன்னேறிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம், ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்தது.
இந்நிலையில், இரண்டு வருடங்களையும் தாண்டி ரஷ்ய- உக்ரைன் போர் நடந்தேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |