யாழ்ப்பாணத்தில் திருடப்பட்ட பல லட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு
Sri Lanka Police
Jaffna
By Vanan
யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவமொன்றில் திருடப்பட்ட 10 இலட்சம் ரூபாவுக்கு மேற்பட்ட பெறுமதியான நகைகள் தெல்லிப்பழை காவல்துறையால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம்(19) மல்லாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் பத்து இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெறுமதியான நகைகள் திருடப்பட்டதாக தெல்லிப்பழை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
இந்த நிலையில் காவல்துறை பரிசோதகர் கலாவினோதன் தலைமையிலான தெல்லிப்பழை குற்றத்தடுப்பு காவல்துறையினர் இன்றைய தினம் சந்தேக நபரையும் திருடப்பட்ட நகைகளையும் மீட்டனர்.
சந்தேக நபரையும் மீட்கப்பட்ட நகைகளையும் நாளைய தினம்(20) மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா

2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி