பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
விடுமுறைகளை கழிப்பதற்காக சில நாடுகளுக்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது கிரீஸ்(Greece), சைப்ரஸ் (Cyprus), துருக்கி (Türkiye) மற்றும் ஸ்பெயினுக்குச் (Spain) செல்லும் பிரித்தானியர்களுக்கே விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரபலமான ஐரோப்பிய இடங்கள் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருவதால், வெளிநாட்டில் உள்ள பிரித்தானிய மக்கள் விழிப்புடன் இருக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள்
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் ஐரோப்பாவில் கடுமையான கோடைகாலத்தை எதிர்கொள்கின்றனர் என சைப்ரஸ் சிவப்பு வானிலை எச்சரிக்கையை அறிவித்துள்ளது.
வெப்ப அலைக்கு வட ஆபிரிக்காவில் இருந்து வரும் வெப்பமான, தூசி நிறைந்த காற்று இப்பகுதியை பாதிக்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண எச்சரிக்கை
இதனையடுத்து பிரித்தானிய வெளியுறவு அலுவலகம் பிரித்தானியர்களுக்கான பயண எச்சரிக்கையை உடனடியாக புதுப்பித்துள்ளது.
இதேவேளை, துருக்கியிலும், கிரீஸிலும் அதிகளவான வெப்பநிலை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |